• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனியார் தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

January 27, 2022 தண்டோரா குழு

கோவை மாதம்பட்டி சென்னனூர் தனியார் தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்ட பேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை பேரூர் மாதம்பட்டி அடுத்த சென்னனூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக பேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பேரூர் போலீசார் அங்கு சென்று சிறு காயங்களுடன் சடலமாக கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பிரசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கடந்த சில தினங்களாக ஆதரவற்ற நபர் ஒருவர் அப்பகுதியில் சுற்றி வந்ததாக பொதுமக்கள் கூறி உள்ளனர். இருந்தவர் அவர் தானா? அவர் யார் என்பதும் குறித்தும், அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க