January 26, 2021
தண்டோரா குழு
கோவையை சேர்ந்த மூன்றரை வயதே நிரம்பிய சிறுமி தேசிய கீதம் மற்றும் தேசிய சின்னங்களை கூறுவதோடு நூறு சித்திரங்களின் பெயர்களையைம் கூறி அசத்தி வருகிறார்.
கோவை உடையாம்பாளையம்,சிந்து நகரை சேர்ந்த சிக் அனுமான்,உமா மகேஷ்வரி தம்பதியரின் ஒரே மகள் மூன்றரை வயது சிறுமி விலாஷினி. சிறு குழந்தை முதலே ஞாபக சக்தியில் அபாரமான இவர்,தேசிய கீதத்தை மனப்பாடமாக பிறழாமல் பாடுவதோடு, இந்திய நாட்டின் தேசிய சின்னங்களான, புலி,மயில்,கொடியின் வண்ணங்கள் ,மற்றும் 100 க்கும் மேற்பட்ட சித்திரங்களின் பெயர்களை கூறு அசத்துகிறார்.
இந்நிலையில் இவரது இந்த சாதனை நோபள் புக் ஆப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை அவரது இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது. இது குறித்து சாதனை சிறுமியின் பெற்றோர் பேசுகையில்,மூன்று வயது நான்கு மாதங்களே ஆன நிலையில் பள்ளி செல்வதற்கு முன்னரே இவர் இந்த சாதனையை செய்துள்ளதாக தெரிவித்தனர்.