• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தனது 4வது கிளையை துவங்கிய டிரைக்கென் நிறுவனம்

February 10, 2021 தண்டோரா குழு

நாட்டுக்கோழி வளர்ப்பில் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் டிரைக்கென் நிறுவனம் கோவையில் தனது 4வது கிளையை துவங்கியுள்ளது.

கோவை சுந்தராபுரத்தில் டிரைக்கன் நாட்டுக்கோழி தனது நான்காவது கிளையை துவங்கியுள்ளது. இதனை காங்கயம் கால்நடை இனவிருத்தி குழும தலைவர் சிவராமகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்தார்.

இதன் துவக்க விழாவில் டிரைக்கென் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கதிரவன் கூறியதாவது,

நாட்டுக்கோழி வகை விற்பனைகளை உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக மாறியுள்ளது டிரைக்கென். இயற்கையான முறையில் எங்களது தோட்டத்தில் வளர்க்கும் நாட்டுக்கோழியை உங்களது வீட்டிற்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் டிரைக்கென் துவக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய முறையில், பழங்கால கலாச்சாரத்தின் நாட்டுக்கோழி கறி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், சுத்தமான ,சுவையான,உடனடியான, புரோடின் மிக்க கறியை தர உறுதியளிக்கிறோம்.
சுவையான,சுத்தமான, சுகாதாரமான நாட்டுக்கோழி கறியை தர வேண்டும் என்பது தான் எங்களது முதன்மையான நோக்கம். கோழி வளர்ப்பு முதல் வாடிக்கையாளர்களுக்கு கறி வழங்குவது வரை இவற்றை ஒவ்வொரு நிலையிலும் கடைபிடித்து வருகிறோம். பாரம்பரிய முறைப்படி இவற்றை தயாரிப்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. டிரைக்கென் கோழி வளர்ப்பு பண்ணை விவசாயத்துக்கும் வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட பகுதியான கோவை, சுல்தான் பேட்டையில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் மண்ணுக்கே உரிய கோழி இனமான அசில் பெருவிடை வகை கோழிகளிலிருந்து குஞ்சுகள் உற்பத்தியாகின்றன. பெருவிடை கோழிக்கறியானது சுவையானது, அதிக புரோட்டின் கொண்டது. பல நுாற்றாண்டுகளாக இந்த கோழியை மக்கள் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். டிரைக்கென் கோழிகள் தென்னந்தோப்புக்குள் வளர்கின்றன. ஓடியாடி விளையாடி, சந்தோஷமாக சண்டையிட்டு, புழுதியில் புரண்டு வளர்கின்றன. பசுமையான புற்களை உண்ணுகின்றன. இயற்கையான காய்கறி, மண்புழுக்கள், சோள வகைகள், தேங்காய்களை உணவாக இட்டு வளர்க்கிறோம். இது கோழிகளை ஆரோக்கியமானதாகவும், அதிலிருந்து பெறப்படும் இறைச்சி சுகாதாரமானதாகவும், சத்துமிக்கதாகவும் இருக்கும்.நாட்டுக்கோழி வாங்க பொதுவாக மக்கள் புறநகர் பகுதிகளுக்கு செல்கின்றனர். டிரைக்கென் இதை எளிதாக்கி, நகருக்குள் கொண்டு வந்து கொடுக்கிறது.பயிற்சி பெற்ற கோழி வெட்டுபவர்கள், பக்குவமாக எளிதில் மக்கும் வகை பாக்கு மட்டையில் இவற்றை பேக்கிங் செய்து தருகின்றனர். பேக்கிங் செய்யும் முறை, வாடிக்கையாளர் சேவை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கோவையில் பீளமேடு, சிங்காநல்லூர், தண்ணீர் பந்தலில் எங்கள் கிளை செயல்படுகிறது. கிலோ ரூ.750க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

மேலும் படிக்க