• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய மளிகை கடை வியாபாரி கைது

January 28, 2022 தண்டோரா குழு

கோவை ஜி.என் மில்ஸ் பகுதி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (56). அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகலின் பேரில் பெரிய நாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவலர்கள் பாலசுப்பிரமணியன் மற்றும் சேதுலிங்கம் ஆகியோர் கடையில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 100 கிலோ குட்கா பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அமிர்தலிங்கத்தை கைது செய்த துடியலூர் காவல்துறையினர் குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அமிர்தலிங்க மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க