• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் டெட் முதல் தாள் தேர்வை 5,252 பேர் எழுதினர்

June 8, 2019 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வினை 86.76 பேர் எழுதினர்.தேர்வு மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கான தகுதித்தேர்வு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் நடைபெறும் இத்தேர்வு 32 மையங்களில் 18,116 பேர் எழுதுகின்றனர்.

முதல் நாளான இன்று இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வை 16 மையங்களில் 6,053 பேர் எழுத விண்ணப்பத்திருந்த நிலையில் 5252 தேர்வர்கள் மட்டுமே தேர்வு எழுதினர்.அதாவது 86.76 சதவீதம் பேர் கோவை மாவட்டத்தில தேர்வு எழுதியுள்ளனர்.இதேபோன்று நாளை நடைபெற உள்ள இரண்டாம் தாள் தேர்வில் 12113 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு நடைபெறும் மையத்தை நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ராசாமணி, இத்தேர்விற்காக 32 மையங்களில் 32 முதன்மை கண்காணிப்பாளர்கள்,32 கூடுதல் கண்காணிப்பாளர்கள்,650 அறை கண்காணிப்பாளர்கள்,200 சோதனையிடுவோர் நியமிக்கப்பட்டு தேர்வுகள் பாதுகாப்புடன் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க