• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் டிரெடிங் நிறுவனம் நடத்தி மோசடி செய்த நபர் கைது

January 8, 2020 தண்டோரா குழு

கோவையில் டிரெடிங் நிறுவனம் நடத்தி முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, பல இலட்ச ரூபாய் மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் ஒஎல்எக்ஸ் லிப்ரா இண்டர்நேசனல் டிரெடிங் நிறுவனம் இயங்கி வந்தது. இந்நிறுவனம் முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி ஏராளமானோர் பல இலட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளனர். ஆனால் உறுதியளித்தபடி பணத்தை திருப்பிதராமல் அந்நிறுவனத்தினர் இழுத்தடித்துள்ளனர்.

இதுதொடர்பாக போத்தனூர் பகுதியை சேர்ந்த தில்லைக்கரசன் என்பவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நிறுவன உரிமையாளர் போனி தாமஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தலைமறைவாக இருந்த போனி தாமசை காட்டூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க