• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் டிப்பன் பாக்சில் மறைத்த லஞ்சப்பணத்துடன் சிக்கிய பத்திர பதிவு அதிகாரி

March 1, 2019 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிக லஞ்சம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்தது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வந்தனர்.

டி.எஸ்.பி. ராஜேஷ்குமார் தலைமையில் துணை ஆய்வுக்குழு அலுவலர் தேவி பாலா ,ஆய்வாளர்கள் பிரபு தாஸ் , விஜயதசமி ஆகியோர் கொண்ட எட்டு பேர் கொண்டு குழுவினர் நேற்று இரவு 8.20 மணியளவில் அதிரடியாக பத்திரபதிவு அலுவலகத்திற்குள் நுழைந்தனர். பத்திர பதிவாளர் செல்வராஜ் கையும் கலவுமாக பிடிப்பட்டார்.

அங்கு கணக்கில் வராத பணம் 93 ஆயிரம் பணத்தை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தினர். எந்த அனுமதியும் இன்றி தற்காலிக ஊழியராக நியமிக்கப்பட்ட ஆறுமுகம் என்பவரிடம் நியமக்கப்பட்டு உள்ளார். இவர் லஞ்ச பணத்தை வசூலித்து பத்திர பதிவாளருக்கு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக ஒப்புக்கொண்டார். மேலும் அதே பகுதியை சேர்ந்த மளிகைக்கடை நடத்தி வரும் முருகேசன் என்பவரிடம் தினமும் பத்திர பதிவு செய்பவர்கள் லஞ்சப்பணத்தை கொடுத்து விடுவர்.அதை டிப்பன்பாக்சில் வைத்து யாருக்கும் சந்தேகம் எழதவகையில் பதிவாளர் காரில் வைத்து விடுவார். அதே போல நேற்று காரை சோதனை செய்த்த பொழுது டிப்பன்பாக்சில் 30 ஆயிரத்து ஐநூறு பணம் சிக்கியது. அலுவலக மேசையில் 2 ஆயிரத்து 500 ரூபாய் உட்பட 1 லட்சத்து 23 ஆயிரத்து 500 ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரகள் கைப்பற்றினர். சோதனையானது. அதிகாலை 3:30 மணிவரையில் நடைப்பெற்றது. மளிகைக்கடைக்காரர் முருகேசன் தப்பி ஒடிவிட்டார். வழக்கு பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்றுடன் வேறு இடத்திற்கு தொண்டாமுத்தூர் பத்திர பதிவு அலுவலர் செல்வராஜ் செல்லும் நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் பிடிப்பட்டது தொண்டாமுத்தூர் பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் படிக்க