• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் டாஸ்மாக் கடைக்குள் ஓட்டைப் பிரித்து திருட முயன்ற நபர் தப்பியோட்டம்

May 9, 2020 தண்டோரா குழு

கோவை செட்டி வீதி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குள் ஓட்டைப் பிரித்து திருட முயன்ற நபர் தப்பியோடினார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.கடை திறந்தவுடன் மது பிரியர்கள் சமூக இடைவேளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று மது பாட்டில்களை வாங்கி செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்த போது தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மே 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்,தவறான முறையில் கடைகளை திறந்து பாட்டில்களை எடுத்து விற்பனை செய்யக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக கோவை மாநகர பகுதியில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகள் சீல் வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மது பிரியர்கள் கோவை செட்டி வீதி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைக்க முடியாமல் சுவற்றின் மேல உள்ள ஓட்டை பிரித்து மது பாட்டில்களை திருட முயன்றனர். அக்கம் பக்கத்தினர் திருடனை பார்த்தவுடன் அங்கு தப்பித்து சென்றான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க