June 12, 2018
தண்டோரா குழு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சட்டப்படி 8 மணி நேர வேலை,நிரந்திர பணி உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் மதுபான சில்லறை கடைகளில் 15 ஆண்டுகளாக 27 ஆயிரம் ஊழியர்கள் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு அரசு எந்தவித அடிப்படை உரிமைகளையும் வழங்காமல் நவீன கொத்தடிமை போல் நடத்துவதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கவும்,வெளிப்படையான சுழற்சி முறை பணியிட மாறுதலை செய்ய வலியுறுத்தினர்.
மேலும்,கடை ஊழியர்களை தாக்கி விற்பனை பணத்தை கொள்ளையடிக்கும் சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தினர்.அனைத்து கடை ஊழியர்களின் உயிருக்கும் உடைமைக்கும்,உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.நீண்ட காலமாக பணி மறுக்கப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கத்தின் கூட்டுக்குழு சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.