• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் டாட்சன்ஸ் மியூசிக் பேரடைஸ்) இன் இசைக் கச்சேரி

May 19, 2023 தண்டோரா குழு

21ம் தேதி DADSONS Music Paradise (டாட்சன்ஸ் மியூசிக் பேரடைஸ்) இன் இசைக் கச்சேரி கோவையில் நடைபெறுகிறது.

கோவையை சேர்ந்த இசைக்கலைஞர் ஐசக் நெல்சனின் டாட்சன்ஸ் மியூசிக் பேரடைஸின் இசைக் கச்சேரி வருகின்ற 21ம் தேதி ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள “கோஇந்தியா” கலையரங்கில் நடைபெற உள்ளது.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த ஐசக் நெல்சன் கடந்த மே ஒன்றாம் தேதி கண்களை கட்டிக்கொண்டு 30 இசைக் கருவிகளை இரண்டு மணி நேரத்திற்குள் வாசித்து உலக சாதனை படைத்துள்ளதாகவும் இதனை வருகின்ற ஜூன் மாதம் கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் கௌரவிக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இண்டர்நேஷனல் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் குழுமம் அங்கீகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் கோவையில் வருகின்ற மே 21ஆம் தேதி ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோஇந்தியா கலையரங்கில் தனது டாட்சன்ஸ் மியூசிக் பேரடைஸின் இசைக் கச்சேரி நடைபெற உள்ளதாக கூறினார்.இக்கச்சேரிக்கு 400 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஐசக் நெல்சன் புல்லாங்குழல், சாக்ஸபோன், வீணை, கீபோர்ட், கிட்டார், தபேலா, வயலின் என 30 க்கும் மேலான இசைக்கருவிகளை வாசிப்பவர் என்பதும் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறியவர்கள்,பெரியவர்கள், தொழில் அதிபர்களுக்கு இசை வகுப்புகளை நடத்தி வருகிறார் என்பதும் காந்திபுரம், சரவணம்பட்டி, துடியலூர், சாய்பாபாகாலனி ஆகிய பகுதிகளில் இவர்களது பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க