• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஞாயிறு ஊரடங்கால் வெறிச்சோடிய முக்கிய சாலைகள்

January 16, 2022 தண்டோரா குழு

இரண்டாவது ஞாயிறு ஊரடங்கு கோவையில் முழுமையாக அமல்படுத்த பட்டுள்ளதால் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.மாநகர் பகுதிகளில் 700 போலீஸார் பாதுகாப்பு பணியில் 45 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமானதை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.ஞாயிறு ஊரடங்கு கோவையில் முழுமையாக அமல் படுத்தப்பட்டுள்ளது.ஊரடங்கை முன்னிட்டு நகரில் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட சாலைகள் வாகன போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

இதேபோல் முக்கிய கடைவீதிகளான உக்கடம், ரங்கே கவுண்டர் வீதி, டவுன்ஹால், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தேவையில்லாத காரணங்களுக்காக வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் வெளியே வருபவர்களை அடிக்க மாட்டோம் என்றும் நியாயமான காரணங்களுக்காக வருபவர்களுக்கு உதவி செய்வோம் என்றும் மாநகர காவல் ஆணையர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க