• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜூன் 28 ஆம் தேதி துவங்குகிறது அனைவருக்குமான கூடைப்பந்து போட்டிகள்

June 26, 2023 தண்டோரா குழு

அனைவருக்குமான கூடைப்பந்து எனும் நோக்கத்தில் மாற்றுத்திறனாளி அணிகள் உட்பட நூறுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்ள உள்ள கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள் கோவையில் வரும் ஜூன் 28 ஆம் தேதி துவங்கவுள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து மற்றும் சக்கர நாற்காலி கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள்,கோவை நேரு ஸ்டேடியத்தில் வரும் ஜூன் 28ம் தேதி நடைபெற உள்ளது. பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் சிற்றுளி தொண்டு நிறுவனம் சார்பாக நடைபெற உள்ள நிலையில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.இதில் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களான சுந்தர்ராஜ், குணசேகர், பத்மநாபன், சுரேஷ் ஆகியோர் பேசினர்.

அப்போது, மார்டின் குழுமம், ராகா குழுமம், பொடாரன் குளிர்பான நிறுவனம், சரவணா ப்ளூ மெட்டல், மை ஸ்போர்ட்ஸ் ஃபேக்டரி, க்ராவிட்டி ஸ்போர்ட்ஸ் மற்றும் பாரத் ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களும் இப்போட்டிகளுக்கான ஆதரவாளர்களாக இருந்து போட்டிகளை நடத்த உள்ளதாகவும், குறிப்பாக அனைவருக்குமான கூடைப்பந்து எனும் நோக்கத்தில் நடைபெற உள்ள இதில், 10 வயது முதல் 59 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் 13 பிரிவுகளில் போட்டியிட உள்ளார்கள். மொத்தம் 159 அணிகள் கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளார்கள்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா & கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி அணிகளும் சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டிகளில் விளையாட உள்ளதாக தெரிவித்தனர். ஜூன் 28 துவங்கி ஜூலை 2ம் தேதி வரை நடைபெற இப்போட்டிகள் கோவை நேரு விளையாட்டரங்கத்தின் கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற உள்ளதாக கூறினர்.

இப்போட்டிகள் மாற்று திறனாளிகளின் திறமைகளை மட்டும் வெளிக்கொண்டு வராமல் சக்கர நாற்காலி கூடைப்பந்து பற்றிய விழிப்புணர்வையும் விளையாட்டு உலகில் ஏற்படுத்த உள்ளதாக நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் படிக்க