• Download mobile app
13 Oct 2025, MondayEdition - 3533
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜி ஸ்கொயரின் ப்ரீமியம் வில்லா மனைத் திட்டங்கள்: “ஜி ஸ்கொயர் துளிர்” மற்றும் “ஜி ஸ்கொயர் ஃப்யூச்சுரா” அறிமுகம்

October 13, 2025 தண்டோரா குழு

இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுமனைத் திட்ட மேம்பாட்டு நிறுவனமும், ரியல் எஸ்டேட் துறையின் முன்னோடித்துவமிக்க நிறுவனமுமான ஜி ஸ்கொயர்,கோவையில் ’ஜி ஸ்கொயர் துளிர்’மற்றும் ’ஜி ஸ்கொயர் ஃப்யூச்சுரா’என இரண்டு அட்டகாசமான ப்ரீமியம் வில்லா மனைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவையில் அறிமுகமாகும் ’ஜி ஸ்கொயர் துளிர்’ மற்றும் ’ஜி ஸ்கொயர் ஃப்யூச்சுரா’ ப்ரீமியம் வில்லா மனைத் திட்டங்கள் குறித்து ஜி ஸ்கொயரின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான பால ராமஜெயம் பேசுகையில் “ப்ரீமியம் வாழ்க்கை முறையை எல்லோரும் எளிதில் பெறக்கூடியதாகவும், அவர்களது லட்சியத்திற்குரியதாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம். ’ஜி ஸ்கொயர் துளிர்’ மற்றும் ’ஜி ஸ்கொயர் ஃப்யூச்சுரா’ வில்லா மனைத் திட்டங்களின் வாயிலாக ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் ஆழ்ந்த நிபுணத்துவம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கே முன்னுரிமை என்ற எங்களது கொள்கையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எங்களது ஆதரவை வழங்குகிறோம்.

காளப்பட்டியில் ’ஜி ஸ்கொயர் துளிர்’ மற்றும் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் ஜி ஸ்கொயர் ஃப்யூச்சுரா. என இந்த இரு வில்லா மனைத் திட்டங்களும் மேம்பட்ட வசதிகள், மனதிற்கு நிம்மதியளிக்கும் பாதுகாப்பு மற்றும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு ஆகிய அம்சங்களை ஒருங்கிணைத்த வகையில் வில்லா கட்டுவதற்கு தயாராக உள்ள மனைகளை வழங்குகின்றன.இதன் மூலம் இந்த இரு வில்லா மனைத் திட்டங்களும் கோவையில் நவீன வாழ்க்கை முறையை மறுவரையறை செய்யும் திட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த இரு திட்டங்களும் டிடிசிபி -யினால் அங்கீகரிக்கப்பட்டவை. ரேராவில் பதிவு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜி ஸ்கொயர் தனது வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் வெளிப்படையான,எந்தவித வில்லங்கங்களும் இல்லாத, தொந்தரவில்லாத வகையில் வில்லா மனைகளை வாங்கும் அனுபவத்தை உறுதி செய்கிறது. ’ஜி ஸ்கொயர் துளிர்’ மற்றும் ‘ஜி ஸ்கொயர் ஃப்யூச்சுரா’ ஆகிய இரு திட்டங்களும் 24×7 பாதுகாப்பு, அதை உறுதிப்படுத்தும் சிசிடிவி கண்காணிப்பு, வில்லா மனைகளுக்கு இடையே உயர்தரத்தில் அமைக்கப்பட்ட பிளாக்டாப் உள்வழிச் சாலைகள், தெருவிளக்குகள் மற்றும் முறையான சட்ட ஆவணங்கள் என மேம்பட்ட வாழ்க்கைமுறையை அளிக்கின்றன.

இவற்றுடன் கூடுதலாக, இத்திட்டங்களில் வில்லா மனைகளை வாங்கி தங்களது கனவு இல்லத்தைக் கட்டும் வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு வருட இலவச பராமரிப்பு சேவையையும் ஜி ஸ்கொயர் அளிக்கிறது. இதனால் வில்லா மனை வாங்கிய முதல் நாளில் இருந்தே பராமரிப்பு தொடர்பான எந்த கவலைகளும் இல்லாமல் நிம்மதியாக இருக்கமுடியும். இதனால், கோயம்புத்தூரில் அறிமுகமாகும் ஜி ஸ்கொயரின் இந்த இரு வில்லா மனைத் திட்டங்களும், மேம்பட்ட வசதி, பாதுகாப்பு மற்றும் நீண்ட கால முதலீட்டுக்கான மதிப்பு ஆகியவற்றை எதிர்பார்க்கும் குடும்பங்களுக்கு மிகச் சிறப்பான தேர்வாக இருக்கின்றன.

பல்வேறு எதிர்பார்ப்புகள், தேவைகளுடன் வில்லா மனைகளை வாங்குபவர்களுக்கு இதுவரையில்லாத அருமையான மதிப்பை வழங்கும் வகையில் இந்த திட்டங்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் அமைந்துள்ள ’ஜி ஸ்கொயர் ஃப்யூச்சுரா’வில் ஒரு சென்ட்டிற்கு ₹11.9 லட்சம் முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காளப்பட்டியில் அமைந்துள்ள ’ஜி ஸ்கொயர் துளிர்’ திட்டத்தில் ஒரு சென்ட்டின் விலை ₹9.9 லட்சம் முதல் தொடங்குகிறது இரண்டு திட்டங்களும் ‘ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட்’ திட்டத்தின் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இது வில்லா மனை வாங்கியதிலிருந்து வில்லா கட்டி முடிக்கும் வரையில் தொடரும் ஒரு தனித்துவமான, ஸ்டார்ட் டூ எண்டு சேவையாகும் என்றார்.

மேலும் படிக்க