• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜாமீனில் வெளியே வந்தவரை கைது செய்ய முயன்ற போலீசார்

December 7, 2018 தண்டோரா குழு

கோவை மத்திய சிறையில் ஜாமீனில் வெளிவந்த கைதியை வேறொரு வழக்கில் கைது செய்ய காவல்துறையினர் முயன்றதால் கைதி தரப்பு ஆதரவாளர்களுடன் கைகலப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலைதயில் ஜெயக்குமாருக்கு தாராபுரம் நீதிமன்றம் பிணைவழங்கியதன் அடிப்படையில் நேற்று ஜெயக்குமார் சிறையில் இருந்து வெளியேறும் சூழல் இருந்த நிலையில் விருதுநகர் காவல்துறையினர் வேறொரு வழக்கில் ஜெயக்குமாருக்கு தொடர்பிருப்பதாக கூறி கைது செய்ய கோவை மத்திய சிறை வாயிலில்காத்திருந்தனர். பிணையில் வருபவரை எவ்வித அறிவிப்புமின்றி கைது செய்வது சட்டத்திற்கு புறம்பானது எனக்கூறு ஜெயக்குமார் தரப்பினரும் வழக்கறிஞர்களும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினருக்குமிடையே மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது அதன் பின்னர் உள்ளூர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததன் அடிப்படையில் அனைவரும் சமாதானமாகினர். மத்தியசிறை வாயிலில் பிணையில் வரும் நபரை காவல்துறையினர் கைது செய்ய மேற்கொண்ட நடவடிக்கையால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க