• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜான்சி ராணி வேடமிட்டு பெண்கள் 2 சக்கர பேரணி

November 3, 2020 தண்டோரா குழு

பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றிவேல் யாத்திரையானது நவம்பர் 6 ம் தேதி துவங்கி முருகனின் முக்கிய வழிபாட்டு தலங்கள் வழியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை கணுவாயில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜான்சி ராணி வேடமிட்டு 50க்கும் மேற்பட்ட பெண்கள் 2 சக்கர பேரணி சென்றனர்

கோவை கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரை வரும் 6ம் தேதி தொடங்வுள்ள நிலையில் அதனை வரவேற்கும் விதத்தில் மாநில இளைஞரணி செயலாளர் பீர்த்தி லட்சுமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஜான்சி ராணி வேடமிட்டு 2 சக்கர வாகனத்தில் ஊர்வலமாக மருதமலை வரை செல்லும் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், மாநில பொதுச் செயலாளர் ஜி கே செல்வக்குமார் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். முன்னதாக தொடர்ந்து கட்சி கொடி ஏற்றப்பட்டு கோஷங்கள் போடப்பட்டன. தொடர்ந்து அருகில் உள்ள முருகன் கோவிலில் பூஜை செய்து இந்த பேரணி தொடங்கப்பட்டது. இந்த பேரணியில் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜ், வடக்கு மாவட்ட தலைவர் சிவசக்திவேல், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பொறுப்பாளர் திருநாவக்கரசு, கணேஷ், மாவட்ட மகளீர் அணி செயலாளர் மஹாலட்சுமி, கண்ணன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

மேலும் படிக்க