• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது !

January 21, 2022 தண்டோரா குழு

கோவை செட்டிபாளையம் பகுதியில் கோவை மாவட்டம் நிர்வாகம் மற்றும் கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை இணைந்து நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு விழாவானது இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.

ஜல்லிக்கட்டு விழாவை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
இதில் 700 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.ஒவ்வொரு காளைகளுடனும் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாடுகளுடன் வருபவர்களும், மாடு பிடி வீரர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ், 24 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.அதன்படி போட்டியானது நடைபெற்று வருகிறது.

கொரோனா பேரிடர் காலம் என்பதால், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.தொலைகாட்சிகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில், 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவை கே எம் சி எச் மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு 25 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு படுக்கைக்கும் ஒரு மருத்துவர் மற்றும் இரண்டு செவிலியர்கள் வீதம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 10 மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் 5 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக கோவை சரவணம்பட்டி பெருமாள் கோயில் மாடு களமிறக்கப்பட்டது.காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் நான்காவது சுற்றுக்கு மாடுபிடி வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.இதுவரை 124 மாடுகளுக்கு தங்க காசுகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க