• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜல்லிக்கட்டு குழுவினருடன் ஆட்சியர் ஆலோசனை – ஜல்லிக்கட்டு நடைபெறுமா?

January 12, 2022 தண்டோரா குழு

கோவையில் ஜல்லிக்கட்டு குழுவினருடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவையில் கடந்த 9ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தேதி குறிப்பிடாமல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதையடுத்து, கோவையிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு குழுவினர் இன்று மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

மாவட்ட காவல்துறை தலைவர் செல்வநாகரத்தினம்,மாவட்ட உயர் அதிகாரிகள், கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மருதமலை சேனாதிபதி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி போட்டிகளை நடத்த வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, நாளை, செட்டிபாளையத்தில் உள்ள ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தை ஆய்வு செய்த பின்னர் போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க