• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜன்னலில் சுடிதாரின் ஷால் வைத்து விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி உயிரிழப்பு

December 4, 2019

கோவை உக்கடம் அருகே வீட்டின் ஜன்னலில் சுடிதாரின் ஷால் வைத்து விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை உக்கடம் ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்தவர் சதாகத்துல்லா, இவரது மகன் காஜா உசேன் (10). 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிறுவன் சுடிதாரின் ஷாலை வைத்து ஜன்னலில் கட்டி விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அக்கா அம்ஷ்த் பேகம் வீட்டின் சமையல் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக காஜா உசேன் ஜன்னளில் கட்டி இருந்த ஷால் சிறுவனின் கழுத்தில் இறுகி உள்ளது. இதில் போராடிய சிறுவன் மயக்கமடைத்துள்ளான்.

பின் மாலை வீட்டிற்கு வந்த பெற்றோர் பார்த்து அதிர்ச்சியடைத்தனர். பின்னர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போது ஏற்கனவே சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க