• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஜனவரி 4ல் துவங்குகிறது உழவை ஊக்குவிக்கும் மாபெரும் வேளாண் திருவிழா

January 2, 2019 தண்டோரா குழு

கோவையில் உழவை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் வேளாண் திருவிழா ஜனவரி 4ம் தேதி துவங்குகிறது.

இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதும், இயற்கை வேளாண்மை சார்ந்த அறிவியல் தொழில்நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் வகையில் செங்கோட கவுண்டர் கல்வி அறக்கட்டளையும், இந்த அறக்கட்டளையால் நடத்தப்படும் கோவை L & T பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து மூன்றாம் ஆண்டு வேளாண் திருவிழா “19” வரும் 2019 ஜனவரி மாதம் 4, 5மற்றும் 6ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இவ்விழாவானது மூன்று நாட்கள் பிரம்மாண்ட விழாவாக நிகழவிருக்கும் இந்த வேளாண் திருவிழா ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் வளாகத்தில் நடைபெற உள்ளது.

ஜனவரி 4 – 108 பசுவழிபாடு

ஜனவரி 4 ஆம் தேதி மாலை 4.30மணியளவில் கொடியேற்றம் நடைபெற்று, அதைத் தொடர்ந்து 108 பசு வழிபாட்டுடன் வேளாண் திருவிழா”19″ பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது.

ஜனவரி 5 – கால் நடைக்கண்காட்சி

இரண்டாவது நாளான ஜனவரி 5 ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது. பசுமாடு, காளைகள் மற்றும் எருமை மாடு ஆகியவை வயதுக்கேற்ப நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வகைக்கும் தனித்தனியாகப்போட்டிகள் நடைபெறுகின்றன. மேலும், காளை வகைகளில் மயிலைக் காளை, செவளைக்காளை, காரிக்காளை என்று பல்வேறு வகையான காளைகளுக்கும் தனித்தனியே போட்டி நடைபெறுகிறது. உலகிலேயே குட்டையான மாடுகளுக்கான கண்காட்சியும் நடைபெறும். இதுவரைக் கண்டிராத பல்வேறு வகையான நாட்டு நாய்கள், சண்டைக் கிடா மற்றும் சண்டை சேவல்களுக்கானகண்காட்சியுடன்பரிசுப் போட்டியும் நடைபெற உள்ளது.காலையில் ஸ்ரீசக்தி கலையரங்கத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஜெயின்இரிகேஷன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின்துணைத் தலைவர் டாக்டர் . எஸ். நாராயணன், நேட்டிவ் லீட்ஸ் அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதனும் கலந்து கொள்கின்றனர்.

நாட்டு நாய்கள் , குதிரை, சண்டைக் கிடா மற்றும் சண்டை சேவல்கண்காட்சி

நாட்டு நாய்கள்,குதிரை, கிடா மற்றும் சண்டை சேவல் போட்டிகள் நடைபெறுகின்றன. நாட்டு நாய்கள் போட்டியில் கோம்பை, இராஜபாளையம் , சிப்பிப்பாறை மற்றும் கன்னி உள்ளிட்டபல்வேறு வகையான நாட்டு நாய்கள் கலந்துகொள்கின்றன. வெட்டுவாய், கிளிமூக்கு, விசிறி வால் உள்ளிட்ட சிறந்த சண்டை சேவல்களுக்கான போட்டிகளும் நடைபெற உள்ளன. ஐநூறுக்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்துகொள்ளும் இப்போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கால்நடைகளுக்கான பரிசுகள் வழங்கும் விழா மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. சேனாபதி காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் கார்த்திகேய சிவசேனாதிபதி மற்றும் ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் டாக்டர். எஸ். தங்கவேலு ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்பிக்க உள்ளனர்.

வேளாண் கண்காட்சி

உழவுக்கு உலகம் தோன்றிய நாள் முதல் நெடிய வரலாறு உண்டு. அந்த வரலாற்றைக் கொண்டாடும் இத்திருவிழாவின் முக்கிய அம்சமாக விவசாயத்தை மேம்படச் செய்யும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய அறிவியல் தொழில்நுட்ப மென்பொருள்கள், கருவிகள் வேளாண் வர்த்தகக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு மானியங்கள் பற்றியும், வேளாண் கடன்களைக் குறைந்த அளவு வட்டி விகிதங்களில் பெறுவது பற்றியும் தகவல்களைக் கொண்டு சேர்க்கும் விதமாக பல்வேறு வங்கிகள் இவ்விழாவிற்கு வருகை தருகின்றன. இந்த வேளாண் கண்காட்சி ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்களிலும் நடைபெறும்.

கருத்தரங்கம்

வெள்ள இடர் மேலாண்மை, விளைபொருட்களுக்கு மதிப்புக் கூட்டுதல், இயற்கைக்கு ஏன் மாற வேண்டும் ஆகிய மூன்று தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. சென்னை ஐ.ஐ.டிகல்லூரியிலிருந்து முனைவர் கே.பிசுதிர் வெள்ள இடர் மேலாண்மை கருத்தரங்கில் தலையேற்று சொற்பொழிவாற்ற உள்ளார். விவசாயி தமிழ்செல்வி விளைபொருட்களுக்கு மதிப்புக் கூட்டுதல் தொடர்பான கருத்தரங்கிற்கு தலைமையேற்றுசொற்பொழிவாற்றுகிறார். இந்த இரண்டு கருத்தரங்கங்களும் ஜனவரி 5-ம் தேதிநடைபெறுகின்றன.
இயற்கைக்கு ஏன் மாற வேண்டும் என்ற தலைப்பில் இயற்கை விவசாயிகளான சுந்தரராமன் ஐயர் மற்றும் மதுராமகிருஷ்ணன் ஆகியோர் தலைப்பில் ஜனவரி 6-ம் தேதி கருத்தரங்கில் பேச உள்ளனர்.

கலை நிகழ்ச்சிகள்

ஜனவரி 5-ம் தேதி மாலை 6 மணிக்கு ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய நடனங்கள்மற்றும் இசை நிகழ்ச்சிகள் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகின்றன. பாரம்பரிய நடனங்களின் தாயகமாக விளங்கும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான கிராமிய கலைஞர்கள் வேளாண் திருவிழாவில் பங்குகொள்கின்றனர்.

ஜனவரி 6 ரேக்ளா போட்டிகள்

வேளாண் திருவிழாவின் மூன்றாம் நாளான நிறைவு நாளில் முக்கியத்துவம் வாய்ந்த ரேக்ளா போட்டி நடைபெறுகிறது. ரேக்ளா போட்டியின் முன்பதிவு ஜனவரி 6-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 7.30 க்கு தொடங்குகிறது. இந்த ரேக்ளா போட்டியில் முன்னூறுக்கும் அதிகமான ரேக்ளா வண்டிகள் கலந்து கொள்கின்றன. நூறு மீட்டர் மற்றும் இருநூறு மீட்டர் என தனித்தனியாக போட்டிகள் நடைபெறும். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக எட்டு கிராம் தங்க நாணயம் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நிறைவு விழா அன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

வேளாண் திருவிழாவில் கலந்து கொள்ள சின்னியம்பாளையம் மற்றும் இருகூரில் இருந்து ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கு ஒரு முறை ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்குச் செல்ல இலவச பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி இலவசம்.

மேலும் விபரங்களுக்கு: 9965656548, 8300193538, 8300193539.

குறிப்பு: நாட்டு நாய்கள், சண்டைக் கிடா, சண்டை சேவல், கால்நடைக் கண்காட்சி ஜனவரி 5-ம் தேதி மட்டுமே நடைபெறும்.

மேலும் படிக்க