• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சோனு சூட் ஸ்வாக் எர்ட் அதிவிரைவு ஆக்சிஜன் மையம் துவக்கம் !

June 6, 2021 தண்டோரா குழு

கோவையில் இருசக்கர வாகனம் மூலம் இலவச ஆக்ஸிஜன் சிலிண்டர் வினியோக திட்டத்தை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் துவக்கி வைத்தார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் பாலிவுட் நடிகர் சோனு சூட் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதற்காக சோனு சூட் பவுண்டேசன் அறக்கட்டளை உருவாக்கி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில்,இன்று கோவை சீராபாளையம் பகுதியில் உள்ள வேதாந்தா அகாடமி கல்லூரியில் சோனு சூட் பவுண்டேசன் அறக்கட்டளை சார்பாக நோய் தொற்று தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை இலவசமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொடுக்கும் திட்டத்தை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் துவக்கி வைத்தார்.

குறிப்பாக இந்த அறக்கட்டளை கர்நாடக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக இருசக்கர வாகனத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொடுத்து உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திட்டத்தை துவக்கி வைத்து பேசிய மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் ,

ஆக்சிஜன் சிலிண்டர் தேவை தமிழ் நாட்டில் அதிகரித்து உள்ளது. தற்போது இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக இருசக்கர வாகனம் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அவர்களுடைய இடத்திற்கே சென்று கொடுக்கும் பணியை இந்த அறக்கட்டளை செய்து வருகிறது. தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் இருசக்கர வாகனங்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர் இலவசமாக கொடுக்கும் பணியை இன்று தொடங்கி வைத்துள்ளேன். மேலும் இதை படிப்படியாக அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இந்நிகழ்வில், ஸ்வாக் எர்ட் அண்ட் சூட் பவுண்டேஷனை சேர்ந்த அமித் புரோஹித், அஞ்சய் பிரதாப் சிங், பப்பீஸ் குழுமத்தின் தலைவர் சிவகுமார், ஆபீஸ் கட்டமைப்பின் இயக்குனர் ஹரி ஹரசுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.நடிகர் சோனு சூட் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டார்.

கோவையில் ஆக்சிஜன் தேவை மற்றும் விநியோகம், போக்குவரத்தை பப்பீஸ்அடிப்படை கட்டடமைப்பு மேற்கொள்கிறது. சோனு சூட்டின் ஸ்வாக் எர்ட் கோவையில் பல்வேறு இடங்களில் உடனடியாக ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கும் மருத்துவமனைகளுக்கும் தீவிர சிகிச்சை முகாம்களுக்கும் உதவிகிறது. அவசர தேவைக்கு சோனு சூட்டின் கோவை உதவி மையத்தை 7069999961 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க