March 12, 2018
தண்டோரா குழு
கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர், நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்து சென்ற நிலையில் அவரை காவல் துறையினர் துரத்தி பிடித்து கைது செய்தனர்.
கோவையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கிரண் என்பவர் நடந்து சென்ற போது, வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் திடீரென அவர் வைத்து இருந்த செல்போனை பறித்து சென்று ஓடினார். அப்போது அவரை பின் தொடர்ந்து கிரணும் ஓடினார். பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை துரத்தி சென்று பிடித்தனர். இதனையடுத்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் கைது செய்யப்பட நபர் அசாம் மாநிலத்தை சேர்ந்த வினோத் என்பதும், ஏற்கனவே கிரணுடன் ஒன்றாக வேலை செய்து வந்து உள்ளார். அப்போது நேற்றே அவர் கிரணிடம் இருந்த பத்தாயிரம் ரூபாய் திருடி சென்ற வழக்கில் காவல் துறையினர் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் வினோத் , அவரை பின் தொடர்ந்து வந்து அவர் வைத்து இருந்த செல்போனையும் பறித்து செல்வதற்காக வந்து உள்ளார். அப்போது அவரை காவல் துறையினர் மடக்கி பிடித்து உள்ளனர்.