• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் செப்டம்பர் 21ம் தேதி துவங்குகிறது ஐவிவ் ஜவுளி கண்காட்சி

August 27, 2019 தண்டோரா குழு

கோவையில் அனைத்திந்திய நெசவாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஐவிவ் ஜவுளி கண்காட்சி வருகின்ற செப்டம்பர் 21ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை அவினாசி சாலையிலுள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட
அச்சங்கத்தின் தலைவர் கே.எல்.டி குப்புசாமி கூறியதாவது,

தமிழக முழுவதும் உள்ள நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.நெசவுத்தொழில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் கண்காட்சிகளை நடத்த திட்டமிட்டு இந்த ஜவுளி கண்காட்சியை நடத்துவதாகவும், இதில் 160 ஸ்டால்கள் இடம்பெறுகின்றன இந்தியாவின் முன்னணி ஜவுளி உற்பத்தியாளர்கள் ஜவுளி விற்பனையாளர்கள் சேலை ரகங்கள் சந்தைப்படுத்தல் இந்த கண்காட்சியில் பெண்களுக்கு தேவையான அனைத்து பட்டு மற்றும் கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், கோரா காட்டன், சில்க் காட்டன் லீ லினன் சேலைகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

மேலும் நெசவு பொருள்கள் நூல் நூல்கள் லினன் வகைகள் யான் வகைகள் என ஒட்டுமொத்த ஜவுளி பொருட்கள், ஜவுளி உற்பத்தி இயந்திரங்களும் இடம்பெறுகிறது. ஜவுளித் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு இந்த கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கண்காட்சியில் சேலம், ஈரோடு, மதுரை, கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஜவுளி தொழில் சார்ந்தவர்கள் ஸ்டால்கள் அமைக்கின்றனர். இதன் துவக்கவிழாவில் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க