• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் செட்டிநாடு பில்டர்ஸ் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

December 9, 2020 தண்டோரா குழு

கோவையில் செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான செட்டிநாடு பில்டர்ஸ் அலுவலகத்தில்
வருமான வரித்துறையினர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் இன்று காலை 8 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரிஏய்ப்பு புகாரின்பேரில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டுவரும் செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான செட்டிநாடு பில்டர்ஸ் அலுவலகத்திலும் இன்று காலை 8 மணி முதல் 15 அதிகாரிகள் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஆவணங்கள் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த தகவல்கள் எதுவும் வருமான வரித்துறையினர் தரப்பில் வெளியிடப்படவில்லை.

மேலும் படிக்க