• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சுற்றுப்புற சூழலை பாதுகாப்பை வலியுறுத்தி 50 கி.மீ சைக்கிள் பயணம் !

July 10, 2021 தண்டோரா குழு

கொரோனா தடுப்பூசி 100 சதவிதம் முழுமை அடையவும் சுற்றுப்புற சூழலை வலியுறுத்தியும் கோவை நேரு கல்வி குழுமம், கோவை பெடலர்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோவைப்புதூர் சார்பில் சிறுவாணி வரை 50 கி.மீ சைக்கிள் பயணம் நடைபெற்றது.

இது குறித்து பெடலர்ஸ் அமைப்பின் தலைவர் மற்றும் கோவை நேரு கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான டாக்டர். பி. கிருஷ்ண குமார் ஆகியோர் கூறியதாவது :-

சில வருடங்களுக்கு முன்புவரை நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருந்த ஒரு பொருள் சைக்கிள்.கிராமம், நகரம் போன்ற வேறுபாடுகளின்றி,எல்லோரும் தினமும் சைக்கிளில்தான் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.சைக்கிளில் பயணம் செலவில்லாதது என்பது ஒருபுறம் இருக்க, மிகச்சிறந்த உடற்பயிற்சியாகவும் அது இருந்தது. முன்பு வயது முதிர்ந்த மனிதர்கள்கூட நெடுந்தூரம் சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்று வருவார்கள்.

பைக், கார்கள் போன்ற வாகனங்கள் வரத் தொடங்கியபிறகு சைக்கிள் உபயோகமற்றதாக மாறிவிட்டது. கிராமங்களில் கூட,சைக்கிள் பயன்பாடு வெகுவாகக் குறைந்து விட்டது. இப்போது மீண்டும் சைக்கிள் மீது இளம் தலைமுறையின் கவனம் திரும்பியிருக்கிறது. உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக உடல், நோய்களின் கூடாரமாக மாறிவருகிறது.

சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஸ்மார்ட் பைக் என்ற திட்டத்தை பல்வேறு நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன. சைக்கிள் ஓட்டுவது ஒரு சிறந்த உடற் பயிற்சியாகும். நடை பயணத்தை விட சைக்கிள் ஓட்டுவதால் உடல் எடை விரைவில் சீராகும். சைக்கிள் ஓட்டும் போது நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சிறந்த முறையில் செயல்பட்டு நல்ல ஆரோக்கியம், மன அமைதியும் கிடைக்கும்.

சைக்கிள் ஓட்டும்போது, இதயத்துடிப்பு சீராகும். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இதய வலுவிழப்பு, இதய அடைப்பு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படும். டைப் -I, டைப் -II சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும்.சைக்கிள் ஓட்டுவதால் கால் தசைகள்,தொடைப்பகுதி தசைகள், எலும்புப் பகுதிகள், முதுகுத் தண்டுவடம், இடுப்புப் பகுதி போன்றவை வலிமைபெறும். ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் வராது. உடல் எடையைக் குறைக்க உதவும்.

சைக்கிள் ஓட்டுபவர்களது மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.மனதளவில் புத்துணர்ச்சி கிடைக்கும்.மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும். அதிக வியர்வை வெளிப்படுவதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறையும். மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றுவற்றுக்கான முக்கியமான காரணி, உடல்பருமன். சைக்கிள் ஓட்டுவதன்மூலம் உடல்பருமன் தடுக்கப்படுவதுடன் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது.

ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கௌவ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்,தினமும் அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்பவர்களுக்கு 45 சதவிகிதம் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும்,கோவையில் இன்று நடைபெற்ற பயணத்தை கோவை நேரு கல்வி குழுமம், கோவை பெடலர்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோவைப்புதூர் ஆகியவை இணைந்து நடத்தின. இந்த சைக்கிள் பயணத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டனர். இந்த பயணமானது இன்று காலை 6.30 மணிக்கு கோவைப்புதூரில் துவங்கியது. கோவைப்புதூர் மைதானத்தில் துவங்கிய இந்த பயணம் சுண்டக்காமுத்தூர், பேரூர், பச்சாபாளையம், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, நல்லூர் வயல், இக்கரை போளூவாம் பட்டி வழியாக சிறுவானியை அடைந்து மீண்டும் அதே பாதையில் கோவைப்புதூரை வந்தடைந்தது.

இந்த பயணத்திற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பதிவு செய்து கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக டி. சர்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.பயணத்தின் முக்கியமாக கலந்து கொண்டவர்கள் அனைவரும் முக கவசம் மற்றும் தலை கவசம் அணிந்து இருந்தனர். மேலும் இந்த பயணத்தில் உயர்ரக மோட்டார் பைக்குகளும் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயணத்தை கோயம்புத்தூர், பீரங்கி படை பிரிவின், தேசிய மாணவர் படையின் கார்னல் சந்திர சேகர் மற்றும் ரோட்டரி மாவட்டம் 3201 ஆளுநர் ரோட்டேரியன் ராஜசேகரன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

மேலும் விழாவில் ரோட்டரி மாவட்ட இயக்குனர் ரோட்டேரியன் எம்பிஹெச்எப் குமரேசன், உதவி ஆளுநர்கள் ரோட்டேரியன் எம்பிஹெச்எப் பாஸ்கரன் மற்றும் மற்றும் ரோட்டேரியன் எம்பிஹெச்எப் ராமநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை பெடலர்ஸ் அமைப்பின் செயலாளர் திரு. விக்னேஷ் மற்றும் பெடலர்ஸ் உறுப்பினர்கள் செய்து இருந்தார்கள்.

மேலும் படிக்க