• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சுற்றுசூழல் விழிப்புணர்வு பேரணி !

June 5, 2019 தண்டோரா குழு

சுற்றுசூழல் பாதுகாப்பில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறியுள்ளார்.

சுற்றுசூழலின் முக்கியதுவம் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் மாற்றங்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலக சுற்றுசூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி அனுசரிக்கபடுகிறது.

இதனையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக கோவையில் சுற்றுசூழல் பாதுகாப்பை வலியுறுத்தி அரசு,தனியார் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இந்நாளை அனுசரித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.பந்தய சாலை வருமான வரிதுறை அலுவலகம் அருகே அம்பாள் ஆட்டோஸ் குழமம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி சுற்றுசூழல் விழிப்புணர்வு அடங்கிய வாகனம் மற்றும் பேரணியை துவக்கி வைத்தார்.பேரணியில் பங்கேற்றவர்கள் “மரம் நடுவோம் நிழல் தருவோம்”,பிளாஸ்டிக்கை பயண்படுத்தாதே மண் வளத்தை கெடுக்காதே” போன்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர்.

இதனையடுத்து அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்,

மக்கள் பெருக்கம்,தட்பவெட்ப நிலை மாற்றம்,நவீன வாழ்கை முறை ஆகிய காரனங்களால் சுற்றுசூழலை பாதுகாக்கபட வேண்டும். தற்போது சுற்றுசூழலை பாதுகாப்பதில் மக்கள் அதிகம் கவனம் செலுத்தி வருவதாகவும் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.சுற்று சூழல் பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் எனவும் அப்போது அவர் கேட்டு கொண்டார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன்,அம்பாள் ஆட்டோ குழுமங்களின் தலைவர் அசோக் முத்துசாமி,மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க