• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்

April 21, 2021 தண்டோரா குழு

கேரள மாநிலம் கொச்சி நகரம் பேரூர் காவல் நிலைய போலீசாருக்கு கேரளா மற்றும் கோவையில் ரூ 2000 கள்ள நோட்டு புழக்கத்தில் சிலர் விடுவதாக தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில் கேரள போலீஸ் தனிப்படையினர் நேற்று கோவை வந்து கரும்புக்கடை வள்ளல் நகர் பகுதியில் உள்ள அஸ்ரப் வயது 24 என்பவரை தமிழகக் காவல்துறை மற்றும் கேரள காவல்துறை கூட்டு முயற்சியால் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் உக்கடம் அல்-அமீன் காலனி பகுதியில் உள்ள செய்யது சுல்தான் வயது 32 என்பவர் வீட்டில் கேரளா மற்றும் கோவை போலீசார் இணைந்து சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் ரூ 1.8 கோடி மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த நோட்டுகள் எங்கிருந்து வந்தது யார் யாருக்கு புழக்கத்தில் விடப்பட்டது என்பது உள்பட பல்வேறு தகவல்களை தனிப்படை போலீசார் இரண்டு பேரிடமும் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதை அடுத்து கைதான 2 பேரையும் கேரளா கொண்டு சென்று விசாரணை மேற்கொள்ள கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர்.

கோவையில் கத்தை கத்தையாக ரூ 1.8 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் பிடிபட்டுள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க