• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று

June 22, 2020 தண்டோரா குழு

கோவையில் சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் சூழலில் மருத்துவத் துறையினர் சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இடைவிடாது தங்களது பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.கோவையை பொருத்தவரையில் கடந்த ஜூன் முதல் வாரத்திலிருந்து மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.இந்த சூழ்நிலையில்
கோவையில் சுகாதாரத் துறையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சுகாதாரத் துறை அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் பணியில் இருந்ததால்,வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் படிக்க