• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சீன தயாரிப்பு செல்போன்களை தரையில் வீசி எறிந்து போராட்டம்

June 18, 2020 தண்டோரா குழு

சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு கோவையில் அஞ்சலி செலுத்திய இந்து முன்னனி அமைப்பினர் சீன அதிபரின் புகைப்படத்தை கிழித்து அந்நாட்டு கொடியை எரித்ததுடன் சீன தயாரிப்பு செல்போன்களை சாலையில் வீசி எறிந்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டு இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. நாடு முழுவதும் சீன தயாரிப்புகளை புறக்கணிப்போம் என எதிர்ப்பு குரல்கள் வலுத்து வரும் நிலையில் கோவை சிவாந்தாகாலனி பகுதியில் இந்து முன்னனி அமைப்பு சார்பில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சீன அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சீன தயாரிப்புகளை உபயோகப்படுத்த மாட்டோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டதுடன் சீன கொடியை எரித்தும்,சீன அதிபதின் புகைப்படத்தை கிழித்தும் தங்கள் கைகளில் வைத்திருந்த சீன தயாரிப்பு செல்போன்களை சாலையில் வீசியெறிந்தும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த ராணுவ வீரர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்டோர் தனி மனித இடைவெளியுடன் நின்று பங்கேற்றனர்.

மேலும் படிக்க