April 26, 2018
தண்டோரா குழு
சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி கோவையில் மதிமுகவினர் இன்று போராட்டம் நடத்தினர்.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கனா 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த இட ஒதுக்கீட்டை மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் வழங்க வலியுறுத்தி மதிமுக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏழை மாணவர்களுக்கான ஒதுக்கீடு தகுந்த மாணவர்களுக்கு சென்று சேர்கிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மேலும்,இணைய வழி விண்ணப்பம் அளிக்கும் முறையை அரசே செய்வதை போல சேர்க்கையும் அரசே நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து கோஷங்களை எழுப்பினர்.ஏற்கெனவே பல முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி முற்றுகையில் ஈடுபட்டு உள்ளனர்.விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என தெரிவித்துள்ளனர்.