February 12, 2018
கோவையில் சிவராத்திரியை முன்னிட்டு செல்வ விநாயகர் கோவிலில் லட்சார்ச்சனை பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவையை அடுத்த ராமநாதபுரம் பகுதியில் செல்வ விநாயகர் கோவில் சிவராத்திரியை முன்னிட்டு இரண்டு தினங்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
சிவராத்திரியை முன்னிட்டு இன்று(பிப் 12) காலை முதலே சாசிவராத்திரியை முன்னிட்டு இன்று(பிப் 12) காலை முதலே சாமிக்கு பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது . இதனை தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும் நலம் பெறவும் , மழை பெய்யவும் , விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது . இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் . இதனையடுத்து நாளை 108 சங்காபிஷேக பூஜை நடைபெற உள்ளது.