May 16, 2018
தண்டோரா குழு
கோவை காந்திமா நகரை சேர்ந்த சஞ்சை ராஜா(26) கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் உள்ளார்.முன்பகை காரணமாக கடந்த ஒரு மாதமாக சிறை காவல் கண்காணிப்பாளர் தனிமை சிறையில் அடைத்து நிர்வாணப்படுத்தி துன்புறுத்துவதாகவும்,மருத்துவ வசதி வேண்டியும், சிறை மாற்றல் வேண்டியும் நீதிமன்ற வளாகத்தில் சட்டையை கழற்றி முழக்கமிட்டார்.
முன்னதாக கோரிக்கைகளை மனுவாக 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் அளித்தார்.அடிதடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்டு சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லும்போது தர்ணாவில் ஈடுபட முயன்றவரை காவல்துறையினர் தடுத்து அழைத்து சென்றனர்.