• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறு குறு தொழில்களை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும் – கிருஷ்ணசாமி

November 25, 2021 தண்டோரா குழு

கோவையில் சிறு குறு தொழில்களை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் பேசும்போது,

தொழில்நுட்பத்தின் மூலமாக சில நூறு பேருக்கு வேலை கொடுப்பார்கள் சில பத்தாண்டுகள் கழித்து அதை மூடி விட்டு சென்று விடுவார்கள் எனவே நிரந்தரமாக கோவை தொழில் மையமாக திகழ வேண்டும் என்றால் சிறு குறு தொழில் மையம் ஊக்குவிக்கப்பட வேண்டும். கோவையில் நான் விரைவில் சிறு குறு தொழில் அதிபர்கள் கருத்துக்களைக் கேட்டு வருகிற 22-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு கருத்தரங்கம் நடத்த திட்டமிட்டுள்ளேன் என்றார்.

மேலும் பேசுகையில் கோவை நகரம் மாவட்டம் தொழிலில் பழைய நிலையை அடைய வேண்டும் கட்டுமானம் வலுப்படுத்த வேண்டும்
ஸ்மார்ட் சிட்டி என்று அழைக்கப்படும் நகரத்தில் மழை பெய்தால் வீதிகளில் நடக்க முடிவதில்லை ஆகவே தமிழக அரசு கோவையை முழு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து வருகின்ற 2026 ஆம் ஆண்டு கூட்டணி கட்சிகளை இணைத்து மாபெரும் புதிய வெற்றியை அடைய இப்பொழுது இருந்தே வேலையை செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க