• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சிறுவர்கள் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் – மீறினால் பெற்றோர் மீது நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

May 19, 2020 தண்டோரா குழு

கோவையில் சிறுவர், சிறுமியர்கள் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மீறினால் அவர்களின் பெற்றோர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் பொழுதுபோக்குக்காக சிறுவர்கள் தங்கள் வீடுகளின் மாடியில் பட்டம் விட்டு வருகின்றனர்.இதனால் பட்டம்
அவ்வப்போது உயரழுத்த மின்பாதையில் சிக்கி
மின்சார வாரியத்திற்கு இது பெரும் பிரச்சனையாகி வருகிறது.

இந்நிலையில், கோவையில் சிறுவர், சிறுமியர்கள் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் மாவட்ட ஆட்சியர்
கு.ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பட்டம் விட்டு விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பல தரப்பில் இருந்தும் புகார்கள் வரப்பெற்றுள்ளதாகவும், இவ்வாறு பட்டம் விட்டு விளையாடுவதால் பட்டம் அறுந்து அருகில் உள்ள உயரழுத்த மின்பாதையில் சிக்கி விடுகிறது. இதன் காரணமாக மின் தடை ஏற்படுவதுடன் மின்சார வாரியத்திற்கு இது பெரும் பிரச்சனையாக எழுந்துள்ளது. சாலையில் செல்லும் போது பயணிகள் மீது பட்டத்தின் கயிறு இறுக்கி மரணம் வரை கொண்டும் செல்லும் ஆபத்து உள்ளதால் பட்டம் விடுவதைத் தவிர்க்க வேண்டும் மீறினால் அவர்களின் பெற்றோர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க