July 30, 2021
தண்டோரா குழு
கோவை நல்லாம்பாளையம் பகுதியில் மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 13 வயது சிறுவனை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
விசாரணையில், அந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் மகன் என்பதும், தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருவதும், தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கடைக்கு செல்ல வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் செல்வக்குமார் உத்தரவின்பேரில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சிறுவனின் தந்தை நந்தகுமார் மீதும், சிறுவன் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், இதுபோன்று சிறுவர்களுக்கு வாகனத்தை ஓட்ட அனுமதி கொடுக்கும் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.