December 25, 2020
தண்டோரா குழு
கோவையில் சிறுவனிடம் மர்ம நபர்கள் செல்போன் பறித்துசெல்லும் கண்காணிப்பு வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை கரும்புக்கடை டோல் கேட் அருகே கடந்த 23 ஆம் தேதி இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்க்கு திரும்பிக்கொண்டு இருந்த சிறுவனிடம் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிறுவனிடம் செல்போனை பறித்து சென்றுள்ளார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.
தற்பொழுது அந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக குணியமுத்தூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் செல்போனை பறிகொடுத்தவர் பெயர் இர்சாத்.என்பதும் கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து குணியமுத்தூர் போலிசார் வழிப்பறி திருடர்களை தேடிவருகிறார்கள்.