• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறுமியை திருமணம் செய்த சிறுவன் போக்ஸோ சட்டத்தில் கைது

October 19, 2022 தண்டோரா குழு

கோவை வடவள்ளி பகுதியில் ஒரு பிரபல துணிக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு உடுமலையை சேர்ந்த 17 வயது சிறுவன் வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த கடைக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் ஜவுளி எடுக்க வந்தார்.

அப்போது சிறுவனுக்கு, அந்த சிறுமியுடன் நட்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிறுமியும், சிறுவனும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை மீட்டு வந்து அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானர்.

இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தினர். விசாரணையில் சிறுமி, சிறுவனுடன் பொள்ளாச்சி பகுதியில் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் பொள்ளாச்சி விரைந்து சென்று சிறுவனையும், சிறுமியையும் மீட்டு வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிறுவன், சிறுமியை அழைத்து சென்று பொள்ளாச்சியில் வைத்து திருமணம் செய்ததும், பின்னர் அங்கு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க