June 11, 2018
தண்டோரா குழு
கோவையில் சிறுத்தை , செந்நாய் போன்று வேடமணிந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு
வனப்பகுதிகளில் இருந்து வெளிவரும் சிறுத்தை , செந்நாய் போன்ற விலங்குகளை கணக்கெடுத்து அதனை ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி வன விலங்குகளை போல வேடமணிந்து வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி, தோலம்பாளையம், வெள்ளியங்காடு உளிட்ட வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து காட்டு விலங்குகளான யானை, சிறுத்தை போன்றவைகள் அதிகமாக விவசாய பயிர்கள் மற்றும் ஆடு மாடுகள் மற்றும் விவசாயிகளை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் விவசாயிகள் பாதிக்கபட்டு உள்ளதால் இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் வன விலங்குகளின் வேடமணிந்து வந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
அப்போது, வனத்துறையில் போதிய வன ஊழியர்கள் இல்லாத காரணத்தால் வன விலங்குகள் வரும் பொழுது அவர்கள் வருவதற்கு வெகு நேரம் ஆவதாகவும் என வனத்துரையில் ஆட்களை நியமிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், இதற்கென தனிக்குழு அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.