January 25, 2026
தண்டோரா குழு
கோவை சுகுணா திருமண மண்டபத்தில் பேங்க் ஆஃப் பரோடா சார்பில் இரண்டு நாட்கள் நடைபெற்று வரும் நம்ம பேங்க் ஆஃப் பரோடா ப்ராப்பர்டி எக்ஸ்போ வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த ப்ராப்பர்டி எக்ஸ்போ ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதன் தொடக்க விழா ஜனவரி 24ஆம் தேதி நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியில் காவேரி குரூப் ஆஃப் கம்பெனிகளின் மேலாண்மை இயக்குநர் (MD) வினோத் சிங் ரத்தோர் அவர்கள் ரிப்பன் கட் செய்து எக்ஸ்போவை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேங்க் ஆஃப் பரோடாவின் ரீஜியனல் ஹெடு கமலகண்ணன்,
லம்போதரா ப்ரொமோட்டர்ஸின் மேலாண்மை இயக்குநர் ரத்தினவேல் நடராஜன், சின்கோ ரியல் எஸ்டேட்டின் ஜெனரல் மேனேஜர் சுவாமிநாதன் மற்றும் சாய் அபிமான் & ஆட்ஸ் ஈவென்ட்ஸின் மேலாண்மை இயக்குநர் தேன்மொழி
தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை சிறப்பித்தனர்.
விழா தொடங்கிய நேரம் முதலே பொதுமக்கள் மற்றும் வீடு வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ப்ராப்பர்டி எக்ஸ்போவை பார்வையிட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.ஆன் தி ஸ்பாட் முறையில் பல வீடுகள் மற்றும் நிலங்கள் முன்பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.