• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறந்த மாணவர்களுக்கான புரட்சியாளர் விருது !

August 31, 2019 தண்டோரா குழு

அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு, இலக்கியம், தலைமை பண்பு, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த மாணவர்களுக்கான புரட்சியாளர் விருதுகளை அமைச்சர் வேலுமணி கோவையில் வழங்கினார்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களான யூ ஆர் லவுட் (You are Loved) மற்றும் அம்மா கல்வியகம் கோவையில் உள்ள கே.பி.ஆர்.
கல்லூரியுடன் இணைந்து, ‘புரட்சியாளர் விருது’கள் வழங்கும் விழா கே.பி.ஆர்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து 4வது ஆண்டாக நடைபெறும் இதில் தமிழகத்தின் மதுரை,சென்னை,திருச்சி உட்பட 33 வருவாய் மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளியில் பயிலும் தகுதி வாய்ந்த 67 மாணவர்களையும், 33 ஆசிரியர்களையும் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக இந்த விருதுக்கான மாணவர்களும், ஆசிரியர்களும் 7 வெவ்வேறு பிரிவுகளில் அதாவது, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு, இலக்கியம், தலைமை பண்பு, சமூகப் பணி, விளையாட்டு, மாற்றுத் திறனாளி மற்றும் இசை போன்ற பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.

விழாவில் விருதுகள் வழங்கி பேசிய தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி,

இதுபோன்ற விருதுகளும், அங்கீகாரமும், அரசுப் பள்ளி மாணவர்களை மேலும் தன்னம்பிக்கை கொள்ளச் செய்வதுடன், குறிப்பாக, கிராப்புற ஏழை மாணவர்களையும் பொருளாதாரத்திலும், சமூகப் பின்னணியிலும் அடித்தட்டில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களையும் நம்பிக்கை கொள்ளச் செய்து, அவர்களிடையே ஒரு சாதகமான,நம்பிக்கை மனநிலையை உண்டாக்க இந்த விருதுகள் உதவும் எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க