March 2, 2018
தண்டோரா குழு
கோவையில் சிரியா படுகொலையை கண்டித்து, அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமியர் அமைப்புகளின் கூட்டமைப்பினர் இன்று(மார்ச் 2) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிரியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர், இதனை கண்டித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக ஐநா தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்கு சித்திரவதையை அனுபவித்து வரும் மக்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் சிரியா தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை கையில் ஏந்தி பெண்கள், குழந்தைகள், என அனைவரும் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.