• Download mobile app
21 Jul 2025, MondayEdition - 3449
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் மையம் துவக்கம்

July 21, 2025 தண்டோரா குழு

நாட்டின் முன்னணி மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழும் சிம்பிள் எனர்ஜி, கோவையில் தனது புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை இன்று துவங்கியது.

கோயம்புத்தூர் – மேட்டுப்பாளையம் சாலை, ஜிஎன் மில்ஸ் பகுதியில் உருவாக்கப்பட்ட, இந்த உயர்தர விற்பனை மற்றும் சேவை மையத்தை, தைரோகேர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னணி தொழில்துறை வழிகாட்டியுமான டாக்டர் ஏ. வேலுமணி திறந்து வைத்தார்.

இந்த புதிய மையம்,வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான மின்சார வாகன அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையம் வாகன விற்பனை மற்றும் சேவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் நேரடியாக வாகனங்களை வாடிக்கையாளர்கள் சோதித்து பார்க்கலாம்.
தற்போது, சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சிம்பிள் ஒன் ஜெனரல் 1.5 மற்றும் சிம்பிள் ஒன்ஸ் எனும் இரண்டு உயர் செயல்திறன் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது.இந்த வாகனங்கள் அதிக ரேஞ்ச், வேகமான சார்ஜிங் திறன் மற்றும் சிறந்த பயண அனுபவத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மைய துவக்க விழாவில் பங்கேற்ற சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுஹாஸ் ராஜ்குமார் கூறியது :-

கோவை, தொழில்நுட்பமும்,அறிவார்ந்த நுகர்வோரும் வசிக்கும் நகரமாக உள்ளது. அதனால் தான் எங்களின் சேவையை இந்த நகரில் விரிவாக்கம் செய்தோம். கோவையில் மின்சார வாகனங்கள் மீதான மக்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இங்கு எக்ஸ்பீரியன்ஸ் மையத்தை தொடங்குவதன் மூலம், நாங்கள் வாடிக்கையாளருடன் நேரடி உறவுகளை உருவாக்க முடிகிறது என நம்புகிறோம். என்றார்.

விழாவில் பங்கேற்ற தைரோகேர் நிறுவனர் டாக்டர் ஏ. வேலுமணி பேசியதாவது :

சிம்பிள் எனர்ஜி நிறுவனம், இந்தியாவின் தன்னிறைவு தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. தொழில்நுட்பம், தொழில்திறன் மற்றும் மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கும் இந் நிறுவனம், எதிர்கால பார்வை கொண்ட நிறுவனமாகத் திகழ்கிறது, என்றார்.

பெங்களூரு, ஹைதராபாத், கோவா, புனே, விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் கொச்சி போன்ற நகரங்களிலும் ஏற்கனவே எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் செயல்படுகின்றன. இந்த வளர்ச்சியின் ஒரு அடுத்த கட்டமாக, 2026 நிதியாண்டிற்குள் இந்தியா முழுவதும் 150 புதிய விற்பனை மையங்கள் மற்றும் 200 வாகன சேவை மையங்களை திறக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சிம்பிள் எனர்ஜி தனது விரிவாக்கத் திட்டங்களுக்கு ப்ரீ-சீரிஸ் ஏ மற்றும் சீரிஸ் ஏ சுற்று முதலீடுகளில் மொத்தம் $41 மில்லியன் முதலீட்டை பெற்றுள்ளது. இதில், பல முன்னணி ஏஞ்சல் முதலீட்டாளர்கள் ஆதரவாக உள்ளனர். எதிர்காலத்தைக் குறிவைத்து, நிறுவனம் FY27 Q2-Q3 காலாண்டுகளில் ஐபிஐ-க்கு தயாராகி வருகிறது. மேலும், தயாரிப்பு புதுமை, உற்பத்தி திறன் மற்றும் வாடிக்கையாளர் அடையாளத்தை வலுப்படுத்தும் நோக்குடன் $350 மில்லியன் முதலீட்டை திரட்டத் திட்டமிட்டுள்ளது.

2019 – ல் பெங்களூரில் நிறுவப்பட்ட சிம்பிள் எனர்ஜி, இந்தியாவின் பிரீமியம் மின்சார இருசக்கர வாகன தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமாக திகழ்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ், சேசியிலிருந்து பேட்டரி வரை, மோட்டாரிலிருந்து மென்பொருள் வரை அனைத்து கூறுகளும் இந்த நிறுவனத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் நோக்கம், மின்சார வாகனங்களை வெறும் மாற்று எரிபொருள் போக்குவரத்து எனவல்லாது, பயணத்துக்கு உற்சாகத்தை கூட்டும் ஒரு சந்தோஷகரமான அனுபவமாக மாற்றுவதாகும்.

மேலும் படிக்க