• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சாலை விளக்குகளை சரி செய்ய கோரி மக்கள் பாதுகாப்பு கட்சியினர் மனு

July 17, 2018

கோவையில் சாலை விளக்குகளை சரி செய்ய கோரி மக்கள் பாதுகாப்பு கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மக்கள் பாதுகாப்பு கட்சியின் தலைவர் DR. காமராஜ் நடேசன் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர்
சாலை விளக்குகளை சரி செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.அப்போது செய்திளார்களை சந்தித்த மக்கள் பாதுகாப்பு கட்சியின் தலைவர் டாக்டர் காமராஜ்,கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சாலை விளக்குகள் எரியாமல் உள்ளது.குறிப்பாக சாய்பாபா காலனி வேலாண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் சாலையில் விபத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் இருக்கிறது இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மேலும்,இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநகராட்சியிடம் மனு அளிக்க உள்ளதாகவும்,அதன்படியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநகராட்சியை வடக்கு தொகுதி மக்களுடன் மிகப்பெரிய முற்றுகை போராட்டத்தை நடத்தவேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக கோவை வடக்கு தொகுதி மக்களின் பிரச்சினைகளை கவனிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்க