January 11, 2021
தண்டோரா குழு
கோவையில் சாலை பாதுகாப்பு குறித்த இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
கோவை தனியார் நட்சத்திர ஹோட்டல் சார்பாக ஹோட்டலில் பணி புரியும் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிவது,மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், கார் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர் ஏற்படுத்த இருசக்கர பேரணி நடைபெற்றது.
மேலும், ‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற நிலையை உருவாக்க,இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த படுகிறது. இன்று தொடங்கிய இருசக்கர பேரணியை போக்குவரத்து துணை காவல் ஆணையாளர் சரவணன் துவக்கி வைத்தார் .இந்த பேரணியானது அவிநாசி, ரேஸ்கோர்ஸ் ரோடு வழியாக சென்று ரெசிடென்ஷி ஹோட்டல் வந்தடைந்தது.