• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீர்செய்யும் பணிகளில் கோவை மாநகராட்சி ஊழியர்கள்

April 27, 2021 தண்டோரா குழு

கோவை ஒப்பணக்காரவீதி, மில்ரோடு சந்திப்பில் கடந்த இரண்டு நாட்களுக்குமுன் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் அந்தவழியாக வந்த கனரகவாகனம் ஒன்று பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தகவல் அறிந்துவந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக கனரக வாகனத்தை அப்புறப்படுத்தி சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.பாதாள சாக்கடைக்காக பதிக்கப்பட்டு இருந்த குழாய்கள் சேதமடைந்து உடைந்ததால் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு வாகனம் கவிழ்தது விபத்து நடந்தது தெரியவந்தது. அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தற்பொழுது மாநகராட்சி ஊழியர்கள் புதிய ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பகல்நேரங்களில் இந்தபகுதிகள் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் என்பதாலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் என்பதாலும் மாநகராட்சி ஊழியர்கள் இரவுநேரத்தில் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் படிக்க