February 16, 2018
தண்டோரா குழு
கோவையில் உள்ள பல்வேறு சாலைகளை உடனே செப்பனிட வலியுறுத்தி திமுகவினர் இன்று(பிப் 16) சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
கோவை பீளமேடு,சவுரிபாளையம்,உடையாம்பாளையம்,நவ இந்தியா போன்ற பகுதிகளில் சாலைகள் அதிகளவில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை செப்பனிட்டு தர மாநகாரட்சி ஆணையரும் , மாநகர பொறியாளர்களுக்கும் பல முறை கோரிக்கை மனு அளித்தும் பயன் இல்லாத காரணத்தால்,மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சாலைகளை உடனே செப்பனிட்டு தர வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதனையடுத்து கோவை பீளமேடு பகுதியில் அவிநாசி சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற இவர்களை,காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.