April 14, 2020
தண்டோரா குழு
வெளியே ஊர் சுற்றித் திரியும் நபர்களை எச்சரிக்கும் விதமாக கோவை சாலைகளில் கொரோனா வரைபடங்கள் வரையப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தற்போது வரை 126 பேர் குரணும் வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்துச் கொரோனா பாதிப்பால் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது இந்நிலையில் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் அதியா சுய தேவைகளுக்காக வருபவர்கள் அரசு அதிகாரிகள் காவல்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் முக கவசம் இல்லாத பொது மக்கள் வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார் நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் நபர்களை தவிர வேறு நபர்கள் மாநகரில் சுற்றித் திரிபவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காந்திபுரம், சிங்காநல்லூர் போன்ற சாலைகளில் கொரோனா வைரஸ் போன்ற ஓவியங்களை காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை மிதமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஆங்காங்கே சாலைகளில் வரைந்து வருவது குறிப்பிடத்தக்கது.