• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சாரதா ஸ்கில் அகாடமியின் முதலாவது பட்டமளிப்பு விழா !

February 23, 2024 தண்டோரா குழு

கோவை கே.ஜி.குழுமத்தின் ஸ்ரீ பழனி முருகன் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் சாரதா ஸ்கில் அகாடமியின் முதலாவது பட்டமளிப்பு விழா வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 24) ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பாரதியார் அரங்கில் சாரதா ஸ்கில் அகாடமியின் தலைமை இயக்குனரான கண்ணப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், சாரதா ஸ்கில் அகாடமி மையத்தில் கற்றுத்தரப்படும் இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ், பி.எல்.சி. புரோகிராமிங், கிளவுட் கம்ப்யூட்டிங்,சிஸ்டம் நெட்வொர்க்கிங், எலக்ட்ரிக் வாகன தொழில்நுட்பங்கள், ஆட்டோமோட்டிவ் சர்வீஸ் டெக்னீஷியன் (2&3 வீலர்கள்), CAD டிசைனிங் போன்ற தொழில் திறன் பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற 500க்கும் அதிகமான மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

கிராமப்புற பகுதிகளில் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்படும் இளைஞர்களுக்கும்,மேற்படிப்பு படிக்க இயலாமல் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களுக்கும் சாரதா ஸ்கில் அகாடமி சார்பில் திறன் சார்ந்த கல்வியை பயிற்றுவித்து அதன் மூலம் வேலை வாய்ப்பு பெற மற்றும் சொந்த தொழில்கள் துவங்க வழிவகை செய்யப்படுகின்றது.

சாரதா ஸ்கில் அகாடமியின் 90% பயிற்சி பயிற்று தொகை, ஸ்ரீ பழனி முருகன் அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி 13ஆம் தேதி சென்னையில் தமிழ் நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் நகை டிசைன் துறையில் மாவட்ட அளவில் சாரதா ஸ்கில் அகாடமியில் பயின்ற CAD டிசைன் துறை மாணவன் தேர்ந்தெடுக்கப்பட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் விருது வழங்கப்பட்டது.

கிராமப்புற மேம்பாட்டின் கீழ், கிராமப்புறங்களில் மற்றும் பழங்குடி பகுதிகளை சேந்த மகளிர்களுக்கு ஆடை வடிவமைப்பு மற்றும் எம்பிராய்டரி, வீட்டிலேயே தயாரிக்க கூடிய ரசாயனங்கள், காளான் வளர்ப்பு மற்றும் பலவற்றை பற்றி சொல்லிக்கொடுத்து, அவற்றை சொந்தமாக தயாரித்து சுயதொழில் மூலம் விற்று அவர்களுடைய நிதி ஆதாரத்தை உயர்த்த வழிவகை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க