• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சாமியார் போல் நடித்து பெண்ணிடம் நூதன முறையில் நகை பறிப்பு

February 4, 2022 தண்டோரா குழு

கோவையில் சாமியார் போல் நடித்து பெண்ணிடம் நூதன முறையில் நகை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை செல்வபுரம் தேவேந்திர வீதியை சேர்ந்தவர் செல்வக்குமார்(47). இவரது மனைவி நேற்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது குறி சொல்வதாக சாமியார் போல் ஒருவர் வந்துள்ளார். அவர் வீட்டில் இருந்த செல்வக்குமார் மனைவியிடம் ஒரு எலுமிச்சை பழத்தை கொடுத்தார். அதனை முகர்ந்து பார்த்த சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து விட்டார்.

சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து கண் விழித்து எழுந்து பார்த்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்க செயினை காணவில்லை. செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் நகை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

சாமியார் போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க