March 1, 2021
தண்டோரா குழு
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் உரிமைகளை காக்கும் விதமாக கோவையில் சர்வதேச மனித உரிமைகள் கூட்டமைப்பு அறிமுக விழா நடைபெற்றது.
கோவையில் சர்வதேச உரிமைகள் கூட்டமைப்பு அறிமுக விழா இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்றது.கூட்டமைப்பின் நிறுவன தலைவர் தவத்திரு ஈஸ்வர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில்,சர்வதேச, அகில இந்திய மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர்.இதில் சர்வதேச மனித உரிமைகள் கூட்டமைப்பின் சர்வதேச நிர்வாகிகளாக பொதுச் செயலாளர் ரமேஷ் கண்ணன், பொருளாளர் சங்கரன் நியமிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து அகில இந்திய தலைவர் சுந்தரபாண்டியன் அகில இந்திய மகளிர் அணி தலைவி லலிதா சண்முகவேல், செயலாளர் சாந்தினி வேணுகோபால் மற்றும் மாநில தலைவர் தனசேகரன் மாநில மகளிரணி தலைவி கிறிஸ்டினா மேரி மதுரை மாவட்ட செயலாளர் லிங்குசாமி மதுரை மாவட்ட மகளிரணி தலைவி முத்துலட்சுமி,ஈரோடு மாவட்ட தலைவர் நாசர், கோவை மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் செயலாளர் ஜெகதீஷ் கோவை மாவட்ட மகளிர் அணி கீதாலட்சுமி மாநகரத் தலைவர் நீலவேணி ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிறுவன தலைவர், தவத்திரு ஈஸ்வர சுவாமிகள்,
இந்த கூட்டமைப்பின் முழுமையான நோக்கம் நாட்டில் அனைவரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் விதமாகவும் குறிப்பாக வெளிநாட்டில் வாழும் இந்திய வாழ் மக்கள் பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டு துன்ப படுவதாகவும் இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் சர்வதேச மனித உரிமைகள் கூட்டமைப்பை தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களின் நலன் பாதுகாக்கப்பட்டு மத்திய மாநில அரசுகளின் உதவியோடு செயல்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.