• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

June 29, 2017 தண்டோரா குழு

தமிழ்நாடு காவல்துறை போதை பொருள் நுண்ணறிவு மற்றும் குற்றபுலனாய்வு பிரிவு சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.மேலும் இந்த பேரணியை கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

மேலும் இந்த பேரணியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.இந்த பேரணியானது காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து துவங்கி அவினாசி சாலை வழியாக வந்து வ.ஊ.சி மைதானத்தில் நிறைவடைந்தது.

உலகம் முழுவதும் இளம் தலைமுறையினரை சீரழிக்கும் சக்திவாய்ந்த போதை பொருட்களான கஞ்சா,ஒயிட்னர், சில பெயின்ட் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை உடல், மனம் இரண்டையும் சிதைத்து சமூகத்திற்கு பெரும்கேடாக அமைந்து விடுகிறது. போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் போன்றவற்றை ஒழிக்க சட்டங்கள் மூலம் உலக நாடுகள் பல்வேறு வகைகளில் முயற்சிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வுகள் நடைபெறுகிறது.

போதைக்கு அடிமையானவர்களை நாம் கண்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி போதைப்பொருட்கள் அடிமைத் தனத்தைப் போக்கும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையங்களுக்கு அழைத்து சென்று தீவிர சிசிச்சை அளித்து அவர்களின் மறுவாழ்வுக்கு உறுதுணையாக வேண்டும் என பேரணியில் மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க